புனித பனிமய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புனித பனிமய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-27 19:38 GMT

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ெபருவிழாவையொட்டி பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம் முன்னிலையில், கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அமிர்தசாமி தலைமையில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக தேர் பவனியாக செல்லக்கூடிய முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடந்தது. திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெறுகிறது. பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடக்கிறது. 5-ந்தேதி பெருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்