சாலை பள்ளத்தை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்

கண்ணமங்கலம் அருகே சாலை பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தனர்.

Update: 2022-08-26 12:19 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் ஆரணி மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.

நேற்று இரவு மழை பெய்தது. இதனால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்தது.

இந்த காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தனர்.

இதனை பார்த்த ஆரணி நெடுஞ்சாலைத்துறையினர் இன்று சாலைப்பணியாளர்கள் மூலம் சாலையை சீரமைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்