ஆதரவற்று தவித்த மூதாட்டியைஆஸ்பத்திரியில் சேர்த்த போலீஸ் சூப்பிரண்டு

ஆதரவற்று தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.;

Update: 2023-04-26 19:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவு இல்லாமலும், கவனிக்க ஆள் இ்ன்றியும் போராடி கொண்டு இருந்தார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் ேநரடியாக மூதாட்டி இருந்த பகுதிக்கு சென்று அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவர் பழங்கள் மற்றும் உடைகள் வாங்கி கொடுத்து, ஒரு பெண் போலீசையும் உதவிக்கு நியமித்தார். போலீஸ் சூப்பிரண்டுவின் கருணை மிகுந்த இ்்ந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்