9 இடங்களில் உதவி மையம் இன்று முதல் செயல்படும்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக 9 இடங்களில் உதவி மையம் இன்று முதல் செயல்படுகிறது.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் விண்ணப்பித்தவர்களின் பலருக்கு உதவித்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
இந்தநிலையில் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணங்கள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள், உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இதுதொடர்பாக தகவல்களை பெற வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், 2 உதவி கலெக்டர் அலுவலகங்கள், 6 தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்கள் இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது. இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தகுதியுடையவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.