அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி பொன்முடி மற்றும் அவர் மனைவி மீது கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி தன் மனைவியுடன் ஆஜரானார். இந்நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.