1-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய தலைமை ஆசிரியை
மேலக்கடலாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை சைக்கிள் வழங்கினார்.
சாயல்குடி.
கடலாடியில் மேலக்கடலாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்கள், 128 மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். தற்போது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியை சற்பிரசாத மேரி, அவரது சொந்த பணத்தில் நடப்பு கல்வியாண்டில் 1-ம் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பள்ளி வளாகத்தில் 1-ம் மாணவ-மாணவிகள் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் போது கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில் வேல்முருகன், வட்டார கல்வி அலுவலர் ஜெயம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.