வைக்கோல் கட்டுகள் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது

மின்கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது

Update: 2023-03-09 18:45 GMT

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் தாலுகா பகுதியில் சம்பா-தாளடி அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. எந்திரங்கள் மூலமே வயல்களில் கிடைக்கும் வைக்கோல் கட்டாக கட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று திண்டுக்கல்லில் இருந்து பூதலூர் அருகே உள்ள விண்ணனூர்ப்பட்டி கிராமத்தில் வயலில் இருந்த வைக்கோல் கட்டுகளை ஏற்றி கொண்டு லாரி பூதலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை திண்டுக்கல் அருகே உள்ள நாரம்பட்டியை சேர்ந்த அந்தோணி (வயது47) என்பவர் ஓட்டி வந்தார். பூதலூர் நரிக்குறவர் காலனி அருகே வந்த போது, மின்கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியது.

இதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. மேலும் வைக்கோல் கட்டுகளும் எரிந்தன. இதனை அறிந்த டிரைவர் லாரியை திறந்த வெளியில் நிறுத்திவிட்டு கீழே குதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி-தஞ்சை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து பூதலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்