துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ஏற்காட்டில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
ஏற்காடு நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவர், அரசு அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது, வீட்டில் ராமசாமி இல்லை. அவர் போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டின் பின்புற பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு கள்ளத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி தலைமறைவான ராமசாமியை வலைவீசி தேடி வந்தனர். உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த அவரை ஏற்காடு போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.