விருதுநகர் சிவந்திபுரம் ஆத்து மேட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 56). இவர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்படும் போது கீழே விழுந்ததில் படுகாயமடைந்து மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி பரமேஸ்வரி உடனடியாக விரைந்து வந்து மயக்க நிலையில் இருந்த காளியப்பனை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு காளியப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.