கடையில் பதுக்கிய சரவெடிகள் பறிமுதல்

சாத்தூர் அருகே கடையில் பதுக்கிய சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-10-26 18:45 GMT

சிவகாசி,

சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் மேட்டமலை பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கடையின் அருகில் தகரசெட்டில் சில அட்டைபெட்டிகள் இருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்த போது அதில் 5 ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா சர வெடிகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கடையின் நிர்வாகி சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த சித்தன்பிரசாந்த் என்பவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி தாலுகாவில் உள்ள விஸ்வநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜூக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் விஜயலட்சுமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார். அப்போது அங்கு 19 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் குருமூர்த்தி, வீரக்கண் ணன், ராஜேஷ்சங்கர்குமார், ராமமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்