போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கிராம சபை கூட்டம்

வாடிப்பட்டி அருகே போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-16 21:43 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் சுதந்திரதின விழாவையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத்தலைவர் தெய்வதர்மர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பஞ்சு, ஒன்றிய,பற்றாளர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சிசெயலாளர் சரஸ்வதி தீர்மான

அறிக்கை வாசித்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு செம்மினிப்பட்டியில் விளைநிலங்கள் உள்ள பகுதியில் அட்டைபெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என 3 முறை கிராமசபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் மீண்டும் அதுசம்பந்தமாக முயற்சி எடுத்துவருவதை கண்டித்தும், மக்கள் தீர்மானத்திற்கு மதிப்பளிக்ககோரியும் காரசார விவாதம் நடந்தது. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு தர்ணா செய்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி யூனியன் கமிஷனர்கள் ரத்தினகலாவதி, வள்ளி, போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை ஆகியோர் நேரில் வந்து கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களை சமாதானபடுத்தினர். அதன்பிறகு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் எந்த ஒரு தொழில் நிறுவனமும் தொடங்க வேண்டாம் என தீர்மானம் நிறைேவற்றப்பட்டது. முடிவில் பணி தள பொறுப்பாளர் சண்முகப்ரியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்