கிராம சபை கூட்டம் மீண்டும் நடந்தது

கிராம சபை கூட்டம் மீண்டும் நடந்தது

Update: 2022-10-12 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு ஊராட்சியில் ஒத்தி வைக்கப்பட்ட காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் நேற்று மீண்டும் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குடிநீர் வசதி 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும், தெருவிளக்குகள் தினமும் புகார் மற்றும் பராமரிப்பு அடிப்படையிலும் சீர்செய்யப்படும் எனவும், உங்கள் பகுதிக்கான குப்பை வண்டிகள் விரைந்து இயக்கப்படும் எனவும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். ஊராட்சியில் வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்