வளர்ப்பு இறால்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

வளர்ப்பு இறால்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடல்பொருள் ஏற்றுமதி ஆணைய இணை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-08 18:45 GMT

சீர்காழி:

வளர்ப்பு இறால்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடல்பொருள் ஏற்றுமதி ஆணைய இணை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரசு விலை நிர்ணயம்

சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் இறால் வளர்ப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும் அடிக்கடி இறால்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தீவன விலை உயர்வால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து இறாலுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென தொடர்ந்து இறால் வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மனு

நேற்று கடல் பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் இணை இயக்குனர் நரேஷ் விஷ்ணு தம்பெடாவை, மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் பூம்புகார் சங்கர், செயலாளர் பேராசிரியர் ஜெயராமன், பொருளாளர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், வளர்ப்பு இறாலுக்கான விலை வீழ்ச்சியை சரி செய்து ஒரு கிலோவிற்கு 100 எண்ணிக்கை உள்ள இறாலுக்கு குறைந்தது ரூ. 300 அளவிற்கும், 30 எண்ணிக்கை அளவு உள்ள இறாலுக்கு ரூ. 550 அளவிற்கும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சாகும்வரை போராட்டம்

அப்ேபாது சங்க நிர்வாகிகள் சேஷன், கோவிந்தராஜ், அரவிந்தன், கலியமூர்த்தி, சுதாகர், சேகர், தனமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் இறால் வளர்ப்பு சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஒருவார காலத்திற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் இறால் விவசாயிகள் சாகும்வரை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்