கரும்புகளை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: சீமான் பேட்டி

கரும்புகளை அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று சீமான் கூறினார்.

Update: 2022-12-27 19:17 GMT

தாமரைக்குளம்:

அரியலூரில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கலுக்கு கரும்புகளை அரசு வாங்கி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் என்ற நம்பிக்கையில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கரும்பு இல்லை என்று அரசு கூறியதால் விவசாயிகளின் நிலைமை என்ன?. எனவே அரசு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும். இதனை இலவசம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறக்கூடாது. இது அவரது பரம்பரை சொத்தா?. இது மக்கள் பணம். கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் அதிக நாட்டம் கொண்ட ஒரு இனத்தின் மக்களை புரட்சிக்கு தயார் செய்ய முடியாது. இதுதான் உலகம் முழுவதும் உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்