கண்வலி கிழங்கு விதைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

இடையகோட்டை பகுதியில் கண்வலி கிழங்கு விதைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-12 19:00 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவு கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கண்வலி கிழங்கு விதை அமோக விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அறுவடை செய்யப்பட்ட கண்வலி கிழங்கு விதைகளை வெயிலில் நன்கு உலர வைத்து விற்பனைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இந்த விதை மற்றும் கிழங்கு இலைகளில் இருந்து புற்றுநோய், அல்சர், விஷக்கடி, குடற்புழு, வயிற்றுப்புண், மூட்டுவலி, தொழுநோய், சரும வியாதிகளுக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வெளிநாடுகளில் மருந்தாக தயாரிக்க பயன்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்வலி விதை ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கண்வலி கிழங்கு விதையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்