அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனை முன்பு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.இ.டி.சி. பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஜோதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுப்பு, வார விடுப்பு கொடுக்க மறுப்பது, இரட்டிப்பு பணிக்கு கட்டாயப்படுத்துவது ஆகியவற்றை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் ராஜன், அருண், பொன்ராஜ், டேவிட்ராஜா, சுதர்சிங், சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.