அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
வையம்பட்டி, ஜூலை.23-
வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் திருச்சியில் இருந்து நடுப்பட்டிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். வேளாங்கண்ணியில் இருந்து பழனி நோக்கி சென்ற அந்த அரசு பஸ் நடுப்பட்டியில் நிற்காது என்று மாணவியிடம் கூறியதாக தெரிகிறது. மேலும் பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடியில் இறக்கி விடுவதாக கூறியதை அடுத்து மாணவி இது பற்றி ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி மாணவி சென்ற பஸ் நடுப்பட்டிக்கு சென்ற போது சிலர் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.