தடுப்பு கம்பியை உரசி சென்ற அரசு பஸ்சால் பரபரப்பு

சேரன்மாதேவியில் தடுப்பு கம்பியை உரசி சென்ற அரசு பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2022-11-24 22:24 GMT

சேரன்மாதேவி:

நெல்லையிலிருந்து சேரன்மாதேவி வழியாக அம்பை செல்லும் பிரதானச் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இச்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று புழுதி பறப்பதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்க சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகே இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ், சாலையில் வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் உரசி, தடுப்பு கம்பிகள் பறந்து விழுந்தன. இதில் கம்பியின் மறுபுறம் படுத்திருந்த கன்று குட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த பரபரப்பு காட்சிகள் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்