அரசு பஸ் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது

ஜோலார்பேட்டை அருகே அரசு பஸ் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது.

Update: 2023-08-12 17:37 GMT

ஜோலார்பேட்டை

திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை வரை அரசு பஸ் தினமும் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 9 மணிக்கு திருப்பத்தூர் பஸ் நிலையம் வந்தடையும்.

இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, பொன்னேரி, மண்டலவாடி வழியாக வெள்ளக்குட்டை சென்றது.

மண்டலவாடி அருகே சென்றபோது திடீரென பஸ்சின் முன்சக்கர டயர் பஞ்சராகி நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் அங்கிருந்து நடந்தும் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டும் சென்றனர்.

பின்னர் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பழுதான முன் சக்கர டயரை அகற்றி இருப்பில் வைத்திருந்த டயரை பொருத்தினர். இதனால் காலதாமதம் ஏற்பட்டதால் வெள்ளக்குட்டைக்கு செல்லாமல் மீண்டும் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது.

இதனால் வெள்ளைக்குட்டை, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் வராததால் அவதிக்குள்ளாகினர்.

மேலும் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்திலும் ஆட்டோக்கள் மூலமும் பள்ளிக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்