சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்

வந்தவாசியில் சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது.

Update: 2023-04-04 17:29 GMT

வந்தவாசி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செய்யாறு பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ் வேலூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு செய்யாறு வழியாக வந்தவாசி நோக்கி இன்று வந்து கொண்டிருந்தது.

செய்யாறை அடுத்த பைங்கினர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவர் பஸ்சை ஓட்டினார்.

வந்தவாசி- செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகில் செல்லும் போது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை இடதுபுறமாக டிரைவர் கோட்டீஸ்வரன் திருப்பினார்.

அப்போது பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள், டிரைவர், கண்டக்டர் ஆகிய அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் மற்றும் பணிமனை அதிகாரிகள் அங்கு சென்று பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்