கோத்தகிரி
கரிக்கையூர் பழங்குடியின கிராமத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோத்தகிரியில் இருந்து சோலூர் மட்டம் வழியாக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் ராஜ்குமார் ஓட்டி சென்றார். ரிக்கையூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென எதிரே கார் ஒன்று வந்தது. காருக்கு வழிவிட டிரைவர் திருப்பியபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே சாலையோரத்தில் இருந்த பாறையின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 16 பயணிகள் உள்பட யாரும் காயம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து கழக கோத்தகிரி கிளை மேலாளர் ஞானபிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் வேறு வாகனங்கள் மூலம் கரிக்கையூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.