தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆடு செத்தது
தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆடு செத்தது.
புதுக்கோட்ைட நகராட்சி 42-வது வார்டில் தமிழ் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு ஒரு ஆட்டை கடித்து குதறியது. இதில் அந்த ஆடு பரிதாபமாக செத்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் பொதுமக்களை பார்த்து குரைக்க தொடங்கியிருக்கிறது. இதனால் பலர் அலறி அடித்து ஓடினர். இதற்கிடையில் நேற்று முன்தினமும் அப்பகுதியில் தெரு நாய்கள் சேர்ந்து ஒரு ஆட்டை கடித்து குதறியதாகவும், அந்த ஆடு செத்ததாகவும் கூறினர். இதனால் ஆடு வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். மேலும் தெருவில் செல்லும் பொதுமக்களையும் நாய்கள் கடிக்க பாய்வதால் அவர்களும் பீதியுடன் காணப்படுகின்றனர். அப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லையை போக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.