சிறுமியை தாயாக்கிய தந்தை கைது
சிறுமியை தாயாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.
லால்குடி:
லால்குடி அருகே 42 வயது கொத்தனாருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கொத்தனாரின் மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் அந்த கொத்தனார், தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கொத்தனாரை தேடி வந்தனர். 7 மாத தேடுதலுக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.