கூடங்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆழ்வா பகுதியை சேர்ந்த சித்திக் என்பவர் மகன் உமர் (வயது 31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கழுத்தில் உள்ள நகைக்காக சிறுமியை கடத்திச் சென்றதாகவும், பின்னர் அது கவரிங் நகை என தெரிந்ததும் திருச்செந்தூர் பஸ்நிலையம் அருகே சிறுமியை விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.