தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு

வந்தவாசி அருகே தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-05-15 12:46 GMT

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகள் ஹரிஸ்ரீ (வயது 7). கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஹரிஸ்ரீ வீட்டில் பேப்பர் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியதில் உடல் முழுவதும் தீ பரவியது.

இதில் பலத்த தீக்காயமடைந்த ஹரிஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரிஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஹரிஸ்ரீயின் தாத்தா அருமைகாந்தி அளித்த புகாரின்பேரில் தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்