பரோட்டா வாங்கி கொடுத்து சிறுமி பலாத்காரம்; போக்சோவில் முதியவர் கைது

பரோட்டா வாங்கி கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 18:12 GMT

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து முதியவர் வைத்திலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்