பீர்பாட்டிலால் தாக்கியதில் சிறுமி காயம்

பீர்பாட்டிலால் தாக்கியதில் சிறுமி காயம் அடைந்தார்.

Update: 2023-08-05 20:56 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருடைய மகள் பூமிகா (வயது 10). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாலையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆசிரியரிடம் டியூசன் படித்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு சிறுமி பூமிகா டியூசன் முடிந்து தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் அளவுக்கு அதிகமான போதையில் கையில் இருந்த பீர் பாட்டிலை கொண்டு சிறுமியின் முதுகில் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். பின்னர் இதுகுறித்து விஜய், எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்