சிறுமி 7 மாத கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது

திருவாடானை அருகே சிறுமி 7 மாத கர்ப்பம் அடைந்தார். வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது.;

Update:2023-04-13 00:15 IST

தொண்டி, 

திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னையில் ஒரு விடுதியில் தங்கி முதியோர் இல்லத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இந்த சிறுமியின் ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான அஜித்குமார் (வயது 25) என்பவர் சிறுமியை காதலித்து அவருடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் தற்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு அவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது அதைத் தொடர்ந்து அவர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவாடானை அனைத்து மகளிர் காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, வாலிபர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்