இரவு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் அவதி

நெமிலி சந்தைமேடு பகுதியில் இரவு முழுவதும் ஏற்பட்ட மின்தடையால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

Update: 2023-04-18 18:27 GMT

நெமிலி சந்தைமேடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் இரவு முழுவதும் வீதிகளிலே தங்கியிருந்தனர்.

இந்த பிரச்சினை சுமார் 8 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில்தான் தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. மின்தடை குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்