புளூடூத் வைத்து தேர்வெழுதிய கும்பல்.. வெளியே இருந்து பதில் சொன்ன நபர்-ராணுவ தேர்வில் பகீர் மோசடி

தேர்வறையில் சிலர் சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்படுவதாக தகவல் வந்தது.;

Update: 2022-10-11 17:02 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ராணுவ பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 56 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அவர்களுக்கான தேர்வு சென்னை ராணுவ பள்ளியில் நடைபெற்றது.

தேர்வறையில் சிலர் சந்தேகத்திற்கு உரிய வகையில் சிலர் செயல்படுவதாக தகவல் வந்தது. இதன் பேரில் ராணுவ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேர்வெழுதியவர்களில் சிலை தங்கள் காதுகளை அழுத்தியபடியும் பேசிக்கொண்டும் இருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அவர்களை ராணுவ அதிகாரிகள் விசாரித்தபோது தான் தேர்வறைக்குள் நடந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

உடனே பாதுகாப்புப்படையினர் அந்த அறையில் தேர்வெழுத வந்த அனைவரையும் சோதனை செய்தனர். அதில் 29 பேர் சிறிய வடிவிலான மைக்ரோ புளூடூத்தை வைத்து தேர்வெழுதியது தெரியவந்தது. சிக்கிய 29 பேரும் எந்த வித தேர்வும் எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியான நிலையில், போலீசார் உடனே அவர்களை தேர்வறையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அவர்கள் 29 பேரும் கைதுசெய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தேர்வறைக்கு வெளியே இருந்து அவர்களுக்கு விடை கூறிய நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ராணுவ தரப்புக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோனத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்