கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல் சிக்கியது

கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-04 18:45 GMT


கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

6 பேர் கைது

மதுரை புதூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் புதூர் காந்திபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஜவகர்புரம் மதுபானக்கடை அருகே ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சிலர் தப்பி சென்றனர்.

ஆனாலும் 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அழகர்கோவில் மாத்தூர் காலனியை சேர்ந்த அந்தோணி (வயது 38), பெருங்குடி அம்பேத்கர் நகர் முருகன்(23), கருமலை(23), பெருங்குடி இருளப்பன்(28), பாண்டியராஜன் (23), பழனிமுருகன்(22) என்பதும், அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்

அதேபோன்று செல்லூர் போலீசார் தத்தனேரி பகுதியில் பதுங்கியிருந்த ஒரு கும்பலை பிடிக்க சென்றனர். அதில் 3 பேர் தப்பி செல்ல ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போது செல்லூர் தத்தனேரி வைத்தியநாதபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கத்திகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்