தூக்குப்போட்டு தொழிலாளி தற்ெகாலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2023-07-24 19:19 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). தொழிலாளியான இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கிருஷ்ணகுமாரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகுமார் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்