அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது

அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.;

Update:2022-07-05 01:13 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று அரியலூர் வழியாக பெரம்பலூருக்கு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரென்று உடைந்து விழுந்து நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி பெரம்பலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்