காட்டுத்தீ அணைக்கப்பட்டது

மூலைக்கரைப்பட்டியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டது

Update: 2022-10-09 18:45 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென காட்டுத்தீ பிடித்து எரிந்து அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் மூலைக்கரைப்பட்டி பகுதியில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில் வடபுறம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற காய்ந்த புற்கள் தீயில் பனை உயரத்துக்கு எரிந்து கருகின.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் உள்ளூரில் இருந்தும் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து உதவினார்கள். நேற்று காலை 10.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

இதையொட்டி நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் மூலைக்கரைப்பட்டி போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்