லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியா் பணியிடை நீக்கம்

ஜமுனாமரத்தூர் அருகே லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-03 12:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள நாடானூர் வனசரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் மலைவாழ் மக்கள் சீத்தாப்பழங்களை சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்தனர்.

அந்த சமயம் அங்கு வந்த வன காப்பாளர் சதீஷ்குமார் அவர்களிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வன அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார். இதனையடுத்து வன அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய வன காப்பாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்