கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர்

நாங்குநேரியில் கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Update: 2023-06-12 18:52 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி ரெயில்வே பாதைக்கு கீழ் பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகே நேற்று முன்தினம் மதியம் கரடி வந்தது. இதை பார்த்த ெபாதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டு கரடியை தேடினர். ஆனால் கரடியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கரடியை பிடிப்பதற்காக அந்த பகுதியில் பெரிய இரும்பு கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் அங்கு வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். இந்த நிலையில் அங்கு வந்த கரடி வேறு எங்கும் செல்லாமல் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் 2-வது நாளாக நேற்று கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்