தரைப்பாலம் உடைந்தது

திருப்புவனம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2022-10-23 18:45 GMT

திருப்புவனம், அக்.24-

திருப்புவனம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பாலம் உடைந்தது

திருப்புவனம் அடுத்த வயல்சேரி கிராமத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் சேர்ந்த கரிசல்குளம், தச்சனேந்தலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே கிருதுமால் நதியின் மேலே சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வழியாக தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது.

நேற்று தண்ணீர் அதிகமாக வந்ததால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. இதனால் அங்கு அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இது குறித்து அறிந்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி அங்்கு சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, நீர்வளத்துறை சருகனியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பாரதிதாசன், தாசில்தார் கண்ணன், யூனியன் ஆணையாளர் அங்கயற்கண்ணி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரியா ராமகிருஷ்ணன், ஈஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்