மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 42,000 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 36,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2022-07-22 14:25 GMT

சேலம்,

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தி அதிகரித்தது. கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 36,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுகிறது. அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.49 அடியாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்