மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது

தென்மேற்குப் பருவமழைக்காலம் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு குறைந்தது.;

Update: 2022-10-09 06:17 GMT

சேலம்:

தென்மேற்குப் பருவமழைக்காலம் குறைந்ததால் கார்நாடக பகுதியில் மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு குறைந்தது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரத்து 666 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நீர் வரத்து 14 ஆயிரத்து 505 கன அடியாக வந்தது. இன்று காலை 12 ஆயிரத்து 689 கன அடியாகவும் குறைந்தது.

இந்த நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணிரும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் அளவை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்அளவும் அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

அணையின் நீர் மட்டம் நேற்று 118.80 இருந்த நிலையில் இன்று காலை 118.73 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 91.45 டி எம் சி-யாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்