மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.