சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவி சிறந்த ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வந்து குளித்துவிட்டு அருகே உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த அருவிக்கு தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் தூவானம் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வாரவிடுமுறையான நேற்று ஏராளனமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தந்தனர். ஆனால் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.