தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் ;மீன்வளத்துறை ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீன்வளத்துறை ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.
நாகர்கோவில்,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீன்வளத்துறை ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.
கோரிக்கை
சென்னையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஆணையர் கே.எஸ்.பழனிசாமியை விஜய்வசந்த் எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் குமரி மாவட்ட மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் அவர் ஆணையரிடம் விளக்கி கூறினார்.