வலையில் சிக்கிய அரியவகை டால்பினை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்...! வனத்துறையினர் பாராட்டு

சாயல்குடி அருகே வலையில் சிக்கிய அரியவகை டால்பினை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.;

Update:2022-12-15 20:53 IST

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடலில் மீனவர்கள் கரைவலை மூலம் மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் கரைவலையில் நான்கு வயது ஆண் டால்பின் சிக்கியது. மீனவர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து கீழக்கரை வன உயிரின சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை சார்பு ஆய்வாளர் கனகராஜ் உத்தரவின் பேரில் பணியாளர்கள் உதவியுடன் மீனவர்கள் டால்பினை மீண்டும் கடலில் விட்டுவிட்டனர்.

இதேபோன்று, கடந்த 20 நாட்களில் 3 டால்பின்கள் வலையில் சிக்கி மீண்டும் கடலில் விடப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்