தொழிலாளர் நலன் சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை முதல் அமைச்சர் வெளியிட்டார்
தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல், தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ,ஆ,ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் ஆகியோர் உடனிருந்தனர்.