ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யபட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கி, ஜனாதிபதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , கவர்னர் ஆர்.என் . ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்
அப்போது, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யபட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கி, அவரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.