அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் புதிய வாகனங்களை வழங்கினார் முதல் அமைச்சர்
அறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;
சென்னை,
அறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.56.18 கோடியில் 13 திருக்கோயில்களில் புதிய கட்டிட பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில்களின் புதிய கட்டுமான பணிகளான மகா மண்டபம், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டும் பணிளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.