முதல் 10 தொகுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்

தொகுதிக்கு ஒரு மைதானம் என்பதில் முதல் 10 தொகுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-15 18:45 GMT


தொகுதிக்கு ஒரு மைதானம் என்பதில் முதல் 10 தொகுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர் பிரியங்கா, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், இ-வாடகை குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-ஐஐ, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யா கிராமின் கவுசல்யா திட்டம் குடிநீர் வினியோகம் (ஊரகம்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

புதுமை பெண் திட்டம்

சிறப்பு திட்ட செயலாக்களான நான் முதல்வன் திட்டம், முதல்வரின் சிறப்பு திட்டாக்கப் பணிகள் செயல்பாடுகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், அங்கன்வாடிகள், புதுமை பெண் திட்டம், மருத்துவத்துறையின் மக்களை தேடி மருத்துவம், முதல்வரின் முகவரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விளையாட்டு மைதானம்

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அரசு அறிவித்த நலத் திட்டங்களில் நிறைவு பெற்ற திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. மேலும் திட்டங்கள் குறித்து அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் உரிய விளக்கங்களை அளித்துள்ளனர். மீண்டும் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆய்வு கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்வேன் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

உடற்கல்வி பாடம் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும். உடற்கல்விக்கு என 77 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பற்றாக்குறை என்ற நிலை இருந்தால் அவற்றை சரி செய்யப்படும். தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்பதை ஒரே நாளில் செய்து விட முடியாது. ஆனாலும் முதல் 10 தொகுதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். திருவாரூர் மாவட்ட தொகுதிகளின் கோரிக்கை குறித்து எம்.எல் ஏ.க்கள் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது குறித்து பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர்களிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 316 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் கலியபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்