தீக்குளித்த காவலாளி சாவு
தூத்துக்குடியில் தீக்குளித்த காவலாளி இறந்து போனார்.
தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 53). இவர் லாரி செட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத் பிரச்சினை காரணமாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதனால் ஒரு வாரமாக சரிவர வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இந்த நிலையில் மட்டக்கடை பஸ் நிறுத்தம் அருகே அவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த சண்முகசுந்தரம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.