ஓடிக்கொண்டிருந்த டிராக்டரில் இருந்து டிரைலர் கழன்றதால் விவசாயி பலி

ஓடிக்கொண்டிருந்த டிராக்டரில் இருந்து டிரைலர் கழன்றதால் விவசாயி பலியானார்.

Update: 2023-06-28 20:28 GMT

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60). விவசாயி. அதே பகுதிைய சேர்ந்தவர் சாமுவேல் முருகேசன். இவர்கள் இருவரும் டிராக்டரில் விவசாய பணிக்காக சென்று கொண்டு இருந்தனர்.

டிராக்டர் டிரைலரில் இவர்கள் இருவரும் உட்கார்ந்து இருந்ததாகவும், மற்றொருவர் டிராக்டரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தேசிகாபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு பாலத்தில் டிராக்டர் சென்றபோது டிரைலரை, டிராக்டருடன் இணைக்கும் கொக்கி திடீரென துண்டிக்கப்பட்டது.

பின்னர் தனியாக கழன்ற டிரைலர் பாலத்தின் சுவரில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்