துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த விவசாயி பலி

ஜமுனாமரத்தூரில் முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-12-13 16:53 GMT


ஜமுனாமரத்தூரில் முன்விரோதம் காரணமாக துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிலப்பிரச்சினை

ஜமுனாமரத்தூர் தாலுகா பலாக்கானூர் கிராமம் மந்தைவெளி கொள்ளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 56), விவசாயி. இவரது அண்ணன் கோவிந்தன். இவர்கள் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் மகன் ஏழுமலை (22) அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சித்தப்பா என்றும் பார்க்காமல் துரைசாமியை நோக்கி சுட்டு உள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் அவரது வலது பக்க வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதற்கிடையில் ஏழுமலை துப்பாக்கியுடன் ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த துரைசாமிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று  இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்